/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காதலியை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் உட்பட 5 பேர் மீது வழக்கு
/
காதலியை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் உட்பட 5 பேர் மீது வழக்கு
காதலியை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் உட்பட 5 பேர் மீது வழக்கு
காதலியை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் உட்பட 5 பேர் மீது வழக்கு
ADDED : நவ 07, 2025 12:31 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ள மறுக்கும் காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர் என 5 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ஆனந்தராஜ்,29; இவரும், சின்னசேலம் பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணும் கடந்த 5 வருடங்களாக காதலித்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியதால் பெண் கர்ப்பமடைந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் கருக்கலைப்பு செய்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கூறியதற்கு ஆனந்தராஜ் மறுத்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஆனந்தராஜ், இவரது தந்தை அண்ணாமலை, தாய் லலிதா, உறவினர்கள் ரோகிணி, கோபிநாத் என 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.