/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை
/
மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை
ADDED : நவ 22, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த மேலுார் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மனைவி இருசாயி, 72; இவர், கடந்த 18ம் தேதி பெரிய சிறுவத்துார் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

