/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
/
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
ADDED : செப் 19, 2024 11:57 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த ராமநாதபுரம் ஜெயபால் மகன் மணிகண்டன்,23; இவரது மனைவி துர்கா,22; இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தச்சூரில் தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வரும் மணிகண்டன், கடந்த 13 ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது மனைவி துர்கா வீட்டில் இல்லாத நிலையில், கோயம்புத்துாருக்கு வேலைக்கு செல்வதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிந்தது. இதனையடுத்து அவரது கணவர் மணிகண்டன் கோயம்புத்துாருக்கு சென்று பார்த்தபோது மனைவி துர்கா, அங்கும் இல்லாதது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மாயமான துர்காவை தேடி வருகின்றனர்.