/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீஸ்காரர் தாக்கு: 3 வாலிபர்கள் கைது
/
போலீஸ்காரர் தாக்கு: 3 வாலிபர்கள் கைது
ADDED : ஜன 20, 2025 04:14 AM
திருக்கோவிலுார் திருக்கோவிலுாரில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவிலுார் நெமிலி கூட்டு ரோட்டில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் திருக்கோவிலூர் போலீஸ்காரர்கள் சுரேஷ் மற்றும் மதன்குமார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சொறையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் பிரவீன்காந்த், 27; கலர்புரத்தைச் சேர்ந்த பழனி மகன் சுபாஷ், 28; சிவலிங்கம் மகன் பிரகாஷ், 22; ஆகியோர் ஒரே பைக்கில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு போலீசாரை மோதுவது போல் வந்து நிறுத்தாமல் சென்றனர்.
உடன் போலீசார் இருவரையும் விரட்டி சென்று சைலோம், கண்ணாத்து பாலம் அருகே பிடித்தனர்.
அதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரவீன்காந்த் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து போலீஸ்காரர் சுரேைஷ தாக்கினர்.
இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து, பிரவீன்காந்த், சுபாஷ், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.