/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இருதரப்பு மோதலில் வாலிபர் கடத்தல் போலீஸ் அதிரடி நடவடிக்கையால் மீட்பு
/
இருதரப்பு மோதலில் வாலிபர் கடத்தல் போலீஸ் அதிரடி நடவடிக்கையால் மீட்பு
இருதரப்பு மோதலில் வாலிபர் கடத்தல் போலீஸ் அதிரடி நடவடிக்கையால் மீட்பு
இருதரப்பு மோதலில் வாலிபர் கடத்தல் போலீஸ் அதிரடி நடவடிக்கையால் மீட்பு
ADDED : ஜன 19, 2025 06:32 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே இரு தரப்பினர் மோதலில் ஆட்டோவில் கடத்தப்பட்ட வாலிபரை டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்டனர்.
தியாகதுருகம் அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் வேல்முருகன்,20; இவர் நேற்று முன்தினம் சித்தலூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு நண்பர்களுடன் பைக்கில் சென்றார்.
அப்போது விளக்கூர் ஏரிக்கரை அருகே மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரை வேல்முருகன் தரப்பினர் சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆத்திரமடைந்த சித்தலுார் கந்தன் மகன் ரமேஷ், 25; கொளஞ்சி மகன் முத்துசாமி, 28; மொட்டையன் மகன் ராமு,27; ஆறுமுகம் மகன் அன்பு, 18; கந்தன் மகன் சுரேஷ், 22; சிவா மகன் பாவாடை, 30; மற்றும் 4 சிறுவர்கள் சேர்ந்து வேல்முருகனை தாக்கினர். அப்போது ரமேஷ் அணிந்திருந்த செயின் அறுந்து காணாமல் போனது.
அதனை வேல்முருகன் எடுத்துக் கொண்டாதாகவும், தரவில்லை எனில் கொன்று விடுவதாக கூறி அவரை ஆட்டோவில் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து தியாகதுருகம் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப் -இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், ராஜ்குமார் மற்றும் வரஞ்சுரம் போலீசார் உட்பட 20 பேர் வேல்முருகனை மீட்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதில், கிடைத்த தகவலின்பேரில் டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையிலான போலீசார், சித்தலுார் அருகே ஆட்டோவை மடக்கி வேல்முருகனை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து வேல்முருகன் அளித்த புகாரின்பேரில் 10 பேர் மீது வழக்கு பதிந்து, ரமேஷ், முத்துசாமி, ராமு, சுரேஷ், பாவாடை ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
எதிர் தரப்பு புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்கு பதிந்து சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஏழுமலை,18; சின்னத்தம்பி மகன் கஜேந்திரன்,20; ஆகியோரை கைது செய்தனர்.