/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் போலீஸ் பற்றாக்குறை; அத்துமீறல்கள் அதிகரிப்பு கண்காணிப்பு கேள்விக்குறி
/
திருக்கோவிலுாரில் போலீஸ் பற்றாக்குறை; அத்துமீறல்கள் அதிகரிப்பு கண்காணிப்பு கேள்விக்குறி
திருக்கோவிலுாரில் போலீஸ் பற்றாக்குறை; அத்துமீறல்கள் அதிகரிப்பு கண்காணிப்பு கேள்விக்குறி
திருக்கோவிலுாரில் போலீஸ் பற்றாக்குறை; அத்துமீறல்கள் அதிகரிப்பு கண்காணிப்பு கேள்விக்குறி
ADDED : ஜூலை 08, 2025 12:35 AM
திருக்கோவிலுார் வேகமாக வளர்ந்து வரும் நகராட்சி. அண்ணா நகர், அஷ்டலட்சுமி நகர், சந்தப்பேட்டை ஆசிரியர் நகர் என பல நகர்கள் உருவாகி, பன்மடங்கு வளர்ந்துள்ளது.
மாவட்ட பிரிப்பு காரணமாக திருவெண்ணைநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் இருந்த பல கிராமங்கள் திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் 81 கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய போலீஸ் ஸ்டேஷனாக திருக்கோவிலுார் உள்ளது.
ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர், 7 சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்களுடன் 80 பேரை கொண்ட போலீஸ் நிலையத்தில், தற்போது 68 பேர் பணியில் இருந்தாலும், சி.ஐ.டி., தனிப்பிரிவு, க்ரைம், கோர்ட் டியூட்டி, பாதுகாப்பு பணி என அயல் பணிக்கு ஏராளமானோர் சென்று விடுகின்றனர்.
திருக்கோவிலுார் நகரம் மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு மட்டும் ஒரு போலீஸ் ஸ்டேஷன், எஞ்சிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு ஜி.அரியூரில் தனியாக ஒரு போலீஸ் ஸ்டேஷனை ஏற்படுத்தினால் மட்டுமே பொதுமக்களின் புகாரை முறையாக விசாரிப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் சீராக பராமரிக்க முடியும். மண் உள்ளிட்ட கனிம வள கடத்தலை தடுக்க முடியும்.
காலை, மாலை என பள்ளி துவங்கி, முடியும் நேரங்களில் 2000க்கும் அதிகமான மாணவிகள் பயிலும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பஸ் நிலைய பகுதியில், பைக் ரேஸ் ரோமியோக்களின் அட்ராசிட்டியை கட்டுப்படுத்த போலீசார் இல்லாததால் நிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது.
நகர பகுதியை கண்காணிக்க 78 கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தி, அதற்கான கட்டுப்பாட்டு அறை, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் அதில் பெரும்பாலான கேமராக்கள் பழுதாகி விட்டது. இதனால் நகரில் இருசக்கர வாகனங்களின் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது.
திறமையான சப்இன்ஸ்பெக்டர்களை கூடுதலாக நியமிப்பதுடன்,  பற்றாக்குறையாக உள்ள போலீஸ் பணியிடங்களை நிரப்பி, அயல் பணிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மாவட்ட போலீஸ் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருக்கோவிலுாரில் போலீஸ் பணி சிறப்பாக அமையும்.

