ADDED : அக் 27, 2024 11:25 PM

அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களின் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உழவர் சந்தையில் துவங்கிய ஊர்வலம், பஸ் நிலையம் வழியாக ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி வரை சென்றது. ஊர்வலத்திற்கு, ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் டி.எஸ்.பி. பிரதீப் துவக்கி வைத்தார்.
ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மவிகாச ப்ரியா அம்பா விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்.
ரோட்டரி சங்க செயலாளர் ரவி, மண்டல பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் அன்பழகன், வின்சென்ட், திலீப், அன்பழகன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
