/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் அரசியல் கட்சியினர் கலக்கம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் அரசியல் கட்சியினர் கலக்கம்
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் அரசியல் கட்சியினர் கலக்கம்
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் அரசியல் கட்சியினர் கலக்கம்
ADDED : டிச 23, 2025 07:20 AM
க ள்ளக்குறிச்சியில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிந்து கடந்த 19ம் தேதி பட்டியல் வெளியிடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதியில் கடந்த அக்., 21 தேதி நிலவரப்படி, 11,60,607 வாக்காளர்கள் இருந்தனர்.
தற்போது வெளியான திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10,76,278 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,36,627 ஆண்கள், 5,39,441 பெண்கள், 210 மூன்றாம் பாலினத்தினர் இடம் பெற்றுள்ளனர்.
இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு என, 84,329 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்கள் பெயரில் உள்ள குறிப்பிட்ட ஓட்டுகள், கடந்த காலங்களில், கள்ள ஓட்டுகளாக பதிவாக வாய்ப்பு இருந்ததாகவும், இதனால், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி தோல்வியை அந்த ஓட்டுகள் நிர்ணயிக்கும் நிலை இருந்தது.
இனி அதுபோன்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்போது மாவட்டத்தில் 84 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதால், யாருக்கு சாதகமாக அமையும், யாருக்கு பாதிப்பு ஏற்படும் என, ஆளும் கட்சி, எதிர்கட்சி என சர்வ கட்சியினர் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

