/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தபால் சேவை குறை கேட்பு முகாம்
/
தபால் சேவை குறை கேட்பு முகாம்
ADDED : டிச 16, 2024 04:38 AM
கள்ளக்குறிச்சி : விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 30ம் தேதி தபால் சேவை குறைகேட்பு முகாம் நடக்கிறது.
விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் செய்திக்குறிப்பு:
விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 30ம் தேதி காலை 10:00 மணிக்கு தபால் சேவை குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அளிக்கப்படும் சேவைகளில் ஏதேனும் குறைபாடு இருப்பின், அதை பதிவு மற்றும் சாதாரண தபால் மூலம் விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கே.பி.டி., வளாகம், கடலுார் ரோடு, விருத்தாசலம் 606 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். 27ம் தேதிக்குள் தபால் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.