/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு; கள்ளக்குறிச்சியில் 5,037 பேர் பங்கேற்பு

ADDED : அக் 12, 2025 10:38 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 5,037 பேர் பங்கேற்றனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1க்கான தேர்வு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது.
தேர்வு எழுத 108 மாற்றுத் திறனாளிகள் உட்பட 5,334 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,037 பேர் தேர்வு எழுதினர். 297 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார்.
தேர்வர்களின் எண்ணிக்கை, வருகை, தேர்வு துவங்கிய நேரம், தேர்வு விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது.
16 தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
இத்தேர்வினை கண்காணிக்க டி.ஆர்.ஓ., தலைமையில் சிறப்பு பறக்கும்படை அமைக்கப்பட்டு இருந்தது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலராக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தேர்வு மையங்களை பார்வையிட்டார்.
ஆய்வின்போது, சி.இ.ஓ., கார்த்திகா உட்ப ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.