/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்டட தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்
/
கட்டட தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்
கட்டட தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்
கட்டட தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : அக் 12, 2025 10:37 PM
ரிஷிவந்தியம்; ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க மாவட் ட கிளை நிர்வாகிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
பகண்டை கூட்ரோட்டில் நடந்த பயிற்சி முகாமிற்கு சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் அருண் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் வளர்மதி முகாமினை துவக்கி வைத்து பேசினார். மாநில பொருளாளர் மதுரை முருகன் பங்கேற்று, தலைமை பண்பு, கிளை மற்றும் மாவட்ட சங்க செயல்பாடுகள் என்ற தலைப்பில் பேசி கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள், 4 சட்ட தொகுப்புகளை கைவிடுதல், அரசு துறைகளில் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ரூ. 21 ஆயிரத்திற்கு குறையாமல் ஊதியம், ரூ. 6 ஆயிரத்திற்கு குறையாமல் ஓய்வூதியம், நல வாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி, நிதி பலன்களை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.