/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுகாதாரத்துறை பெண் அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
சுகாதாரத்துறை பெண் அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்
சுகாதாரத்துறை பெண் அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்
சுகாதாரத்துறை பெண் அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : அக் 12, 2025 10:37 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். செயலாளர் ஜோதி இருதயமேரி முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயந்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மணிமேகலை பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.
இரவு நேரத்தில் அதிக பிரச்னையுள்ள கர்ப்பிணிகளை கண்காணிக்குமாறு கிராம சுகாதார செவிலியர்களுக்கு தெரிவிக்க கூடாது.
மகப்பேறு இறப்பு மற்றும் குழந்தை இறப்பின் போது அரசு மருத்துவமனைக்கு சென்று 'டிஸ்சார்ஜ் சம்மரி' வாங்கி வருமாறு தெரிவிப்பதை தவிர்த்தல், மாலை 5 மணிக்கு மேல் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை தவிர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கடலுார் மாவட்ட தலைவர் சுதா, மாநில இணை செயலாளர் சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.