/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க ஆலோசனைக் கூட்டம்
/
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க ஆலோசனைக் கூட்டம்
ADDED : நவ 09, 2025 07:12 AM

கள்ளக்குறிச்சி: பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன், மாநில தலைமையிடத்து செயலாளர் முகுந்தையா, மாநில தணிக்கை செயலாளர் பாரதியார், மாநில பிரசார செயலாளர் ஜெகதீசன், மாவட்ட துணை தலைவர் இளையராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்றார். நிறுவன தலைவர் வேமன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு நபர் கமிஷன் அறிக்கையை அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்தையன் நன்றி கூறினார்.

