நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : அரியலுார் துணை மின்நிலையத்தில் இன்று 20ம் தேதி அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாணாபுரம் அடுத்த அரியலுார் துணை மின் நிலையத்தில் இன்று 20ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் இன்று நடைபெறுவதாக இருந்த மின்தடை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.