/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை விபத்து அதிகம் ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உத்தரவு

ADDED : ஜூலை 02, 2025 07:43 AM
கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்டத்தில், எடைக்கல் - சேலம் ரவுண்டானா, பில்லுார் மற்றும் கெடிலம் இணைப்பு சாலை, மூங்கில்பாடி சாலை உள்ளிட்ட சில இடங்களில் அதிக விபத்துகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதியில் விபத்துகளை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தயார் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதைகள் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மாவட்டத்தில் தேசிய, மாநில, மாவட்ட சாலைகளில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு, வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் கண்காணிக்க வேண்டும். சாலை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க போக்குவரத்து, நெடுஞ்சாலை துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்த் குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.