ADDED : ஏப் 29, 2024 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னோட்டமான தேர்வு
அரசு நடத்தும் நீட் தேர்விற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 'தினமலர்' மாதிரி தேர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நீட் தேர்வு குறித்த போதுமான புரிதல் இல்லாத நிலையில், இந்த மாதிரி தேர்வு எங்களுக்கு நல்ல தெளிவை கொடுத்துள்ளது.
நீட் தேர்வுக்கு செல்வோர் முறையாக நேரத்தை கடைபிடித்து, முன்கூட்டியே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. அதேபோல் தேர்வுக்கு செல்லும்போது எந்தெந்த பொருட்களை எடுத்து செல்ல கூடாது என்பதையும் அறிந்து கொண்டேன்.
கடும் கட்டுபாடுடன் நடத்திய மாதிரி தேர்வு பதற்றத்தை கொடுத்தாலும், நீட் மெயின் தேர்வை எதிர்கொள்ள முன்னோட்டமாக திகழ்ந்துள்ளது.
- சஜ்ஜூ, மூரார்பாளையம்.

