/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனியார் பள்ளி பஸ் மரத்தில் மோதி விபத்து
/
தனியார் பள்ளி பஸ் மரத்தில் மோதி விபத்து
ADDED : டிச 12, 2024 07:44 AM
ரிஷிவந்தியம்; வாணாபுரம் அருகே சாலையோர மரத்தின் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்துக்குள்ளானது.
சங்கராபுரம் அடுத்த குளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் ரமணிசந்திரன்,27; இவர் வடசேமபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும், டிரைவர் ரமணிசந்திரன் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பஸ்சில் ஏற்றிக்கொண்டு கடம்பூருக்கு சென்றார். அனைத்து மாணவர்களும் இறங்கியதும் வழக்கம்போல் ஓடியந்தலில் பஸ்சினை நிறுத்துவதற்கு சென்றார்.
திருக்கோவிலுார் - சங்கராபுரம் சாலையில் ஓடியந்தல் பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் உள்ள மரங்கள் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், ஹரினிசந்திரனுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் மாணவ, மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.