தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


ADDED : பிப் 06, 2024 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2024 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளியில் வரும் 11ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 11ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை உள்ளிட்ட பல்வேறு முன்னணி தனியார் துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

எனவே, 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், 8 முதல், 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், டிரைவர், ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்கலாம். பங்கேற்போர், தங்களது சுய விபரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வரவேண்டும்.

ஒரே இடத்தில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பதால், வேலை தேடுபவர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனம் மற்றும் பணிக்கான நேர்க்காணலில் பங்கேற்று பயனடையலாம்.

முகாம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு 88072 04332, 04151--295422 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us