/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் அரசு கல்லுாரியில் கலைத் திருவிழா போட்டி பரிசளிப்பு
/
திருக்கோவிலுார் அரசு கல்லுாரியில் கலைத் திருவிழா போட்டி பரிசளிப்பு
திருக்கோவிலுார் அரசு கல்லுாரியில் கலைத் திருவிழா போட்டி பரிசளிப்பு
திருக்கோவிலுார் அரசு கல்லுாரியில் கலைத் திருவிழா போட்டி பரிசளிப்பு
ADDED : அக் 28, 2025 05:48 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரசு கலைக் கல்லுாரியில் நடந்த கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொன்முடி எம்.எல்.ஏ., பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.
திருக்கோவிலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், கலை திருவிழா கடந்த மாதம் 16ம் தேதி துவங்கி, இம்மாதம் 10ம் தேதி வரை நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்று கல்லுாரி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.
வணிகவியல் துறை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். கவுரவ விரிவுரையாளர் சீனிவாசன் கலைத் திருவிழா அறிக்கையை வாசித்தார். கல்லூரி பொறுப்பு முதல்வர் மகாவிஷ்ணு தலைமை தாங்கினார். பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுமதி, கல்லுாரி பேராசிரியர்கள் சீனு, கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினர். நகராட்சி சேர்மன் முருகன், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம், நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சடகோபன், தீனதயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் ஸ்ரீதர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர் மன்னார்சாமி நன்றி கூறினார்.

