/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு வழங்கல்
/
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு வழங்கல்
ADDED : ஜன 17, 2025 11:21 PM

ரிஷிவந்தியம்: மேலப்பழங்கூரில் அறம்பழகு அறக்கட்டளை மற்றும் சென்னை சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
வாணாபுரம் அடுத்த மேலப்பழங்கூரில் நடந்த போட்டிக்கு அறம்பழகு அறக்கட்டளை தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாரியப்பன், கிருஷ்ணன், ஆரோக்கியதாஸ், ஞானவேல், சரவணன் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா ஒருங்கிணைப்பாளர் நீலகண்டதமிழன் திருக்குறளின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் மூன்று நிலைகளாக மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில், அதிக எண்ணிக்கையிலான திருக்குறளை ஒப்புவித்து முதலிடம் பிடித்த 3 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.500, மூன்றாமிடம் பிடித்த 9 பேருக்கு தலா ரூ.250 பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அறம்பழகு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வாசுகிபொன்னரசு, செல்வகுமரவேல், புவனா, ராஜேந்திரன், பார்த்திபன், ஞானவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.