UPDATED : நவ 07, 2026 02:05 PM
ADDED : நவ 07, 2026 02:02 PM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாலை சீர்கேட்டை கண்டித்து பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு 4 மற்றும் 5 வது வார்டு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், மழைக் காலங்களில் சாலை இன்னும் படுமோசமாக சேறும் சகதியுமாகி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
சாலையை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் ஊர் மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனை கண்டித்து நேற்று காலை அப்பகுதியில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
