/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்
ADDED : பிப் 05, 2025 10:21 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். டாக்டர் வந்தனாதேவி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை கீதா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்கள் பேசும் போது, 'கண்களை தினமும் பராமரிக்க வேண்டும்; துாசு பட்டால் கண்களை அழுத்தி தேய்க்க கூடாது; கண்ணில் வலி மற்றும் குறைபாடு இருந்தால் அலட்சியபடுத்தாமல் உடனடியாக அருகில் உள்ள டாக்டரை அணுகி, பரிசோதனை செய்ய வேண்டும்; என வலியுறுத்தினர்.
தொடர்ந்து, பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், வட்டார கண் மருத்துவ உதவியாளர் ஷகிலா மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தார்.
இதில், கண்களில், குறைபாடுள்ள 383 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வசந்தா, சுபா, கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.