
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் குமார், 32; என்பவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குமார் குடும்பத்திற்கு ஊராட்சித் தலைவர் ஏழுமலை தனது சொந்த செலவில் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.

