/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்கள பணியாளர்களுக்கு டேப்லெட் வழங்கல்
/
முன்கள பணியாளர்களுக்கு டேப்லெட் வழங்கல்
ADDED : ஆக 04, 2025 11:26 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் டேப்லெட் கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாவட்ட வாரியாக செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் வகையில் சமுதாய வழி நடத்துபவர்கள் மற்றும் சமுதாய மறுவாழ்வு பணியாளர்கள் 120 நபர்கள் மூலம் நகர்ப்புற மற்றும் ஊரக புற பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றது. அதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட செயலி மூலம் தகவல்கள் பதிவு செய்கின்றனர். இதற்காக, சமுதாய வழி நடத்துபவர்கள் மற்றும் சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு டேப்லெட்டுகளை, கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.