/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தச்சூர் அரசு பள்ளிக்கு குடிநீர் இயந்திரம் வழங்கல்
/
தச்சூர் அரசு பள்ளிக்கு குடிநீர் இயந்திரம் வழங்கல்
ADDED : டிச 12, 2024 07:46 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பாக தச்சூர் காட்டுக்கொட்டகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தேர்வு ஆளுநர் செந்தில்குமார், மண்டல துணை ஆளுநர் இராமலிங்கம், தச்சூர் ஊராட்சி தலைவர் மல்லிகா அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சண்முகம் வரவேற்றார். விருகாவூர் வெங்கடாசலம் விருந்தாம்பாள் நினைவு அறக்கட்டளை நிர்வாகத்தினர் வழங்கிய ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் இயந்திரத்தினை ரோட்டரி முன்னாள் தலைவர் முத்துசாமி பள்ளிக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
ரோட்டரி சங்க செயலாளர் சிவக்குமார், முன்னாள் தலைவர் இமானுவேல் சசிகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.