ADDED : மார் 05, 2024 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பி.டி.ஓ.,க்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, ரிஷிவந்தியத்தில் பி.டி.ஓ.,க்களாக பணிபுரிந்த ரங்கராஜன் கள்ளக்குறிச்சிக்கும், சவரிராஜன் கலெக்டர் அலுவலகத்தில் தணிக்கை பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பதிலாக கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த சந்திரசேகரன் ரிஷிவந்தியம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், திருக்கோவிலுாரில் பணிபுரிந்த நடராஜன் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகவும் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

