/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர் நிறுத்த இடம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
/
தேர் நிறுத்த இடம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : டிச 30, 2025 07:06 AM
சங்கராபுரம்: கொசப்பாடியில் கோவில் தேரை சாலையில் நிறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சங்க ராபுரம் அடுத்த கொசப்பாடி கிராம காலனியில் 1000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு புதிதாக இந்தாண்டு தேர் செய்து கடந்த ஆடி மாதம் தேர் திருவிழா நடந்தது. இந்த தேரை நிறுத்த இட வசதி இல்லாததால் கோவிலுக்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை தேர் நிறுத்துவதற்காக கேட்டனர். அந்த நபர் இடம் தர மறுத்ததால், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஒரு மாதமாகியும் தேர் நிறுத்த இடம் ஒதுக்கப்படவில்லை. இத னால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை 10:00 மணிக்கு தேரை கொசப்பாடி - சங்கராபுரம் சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தாசில்தார் வைரக்கண்ணன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இன்னும் சில நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தா சில்தார் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் 11:00 மணியளவில் மறியலை கைவிட்டனர்.

