/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்
/
பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்
ADDED : பிப் 08, 2025 06:15 AM
சங்கராபுரம்;சங்கராபுரத்தில், பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் இன்று நடக்கிறது.
தாலுகா அலுவலகத்தில் இன்று 8ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
முகாமில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல் நீக்கம், மொபைல் போன் சேர்ப்பு உள்ளிட்டவைகளை பெற உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.
இத்தகவலை வட்ட வழங்கல் அலுவலர் சேகர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் இன்று காலை 10:00 குறைகேட்பு முகாம் நடக்கிறது.
ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர், உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். இத்தகவலை வட்ட வழங்கல் அலுவலகம் தெரிவித்துள்ளது.