/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
/
தியாகதுருகத்தில் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
தியாகதுருகத்தில் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
தியாகதுருகத்தில் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
ADDED : அக் 23, 2025 11:19 PM

தியாகதுருகம்: தியாதுருகம் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாகதுருகம் நகரை ஒட்டி பிரதிவிமங்கலம் மற்றும் வடதொரசலுார் ஊராட்சிகளின் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு கூட்டமாக சுற்றித் திரியும் நுாற்றுக்கணக்கான தெரு நாய்கள் அவ்வப்போது பொதுமக்களை கடித்து அச்சுறுத்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் பெண்களைக் கண்டால் சில நாய்கள் துரத்தி கடிக்க பாய்கிறது. அதேபோல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துவதால் நிலை தடுமாறி பலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இவைகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் சில நேரங்களில் வெறிபிடித்து ஒன்றோடு ஒன்று கடித்து குதறிக் கொள்வதோடு மனிதர்களையும் கடிக்க துரத்துகிறது.
குறிப்பாக இறைச்சி கடைகள் அருகில் நாய்கள் கூடி நின்று கழிவுகளை தின்ன போட்டி போட்டு சண்டையிட்டுக் கொள்கின்றன. நாய்கள் கடித்து ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படுமோ என பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த தியாகதுருகம் பேரூராட்சி, வடதொரசலுார் மற்றும் பிரதிவிமங்கலம் ஆகிய ஊராட்சிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நுாற்றுக்கணக்கான தெருநாய்கள் சுற்றித் திரிவது பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தியாகதுருகம் பகுதியில் பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

