sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 6ம் நாள் விழா

/

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 6ம் நாள் விழா

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 6ம் நாள் விழா

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 6ம் நாள் விழா


ADDED : அக் 23, 2025 11:20 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவத்தின் 6ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிகள் விழாவின் 6ம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6:45 மணி முதல் 8:45 மணி வரை நித்திய பூஜை, தொடர்ந்து மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து எழுந்தருளி பெருமாள், தாயார், வேணுகோபாலன் சன்னதியில் மங்களா சாசனம், 11:00 மணிக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு மணவாள மாமுனிகள் எழுந்தருளி சன்னதி உலாவும், தொடர்ந்து நான்காயிர திவ்ய பிரபந்த சேவை, திருவாராதனம். 7:30 மணிக்கு சாற்றுமுறை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us