/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் தொடர் திருட்டு: பொதுமக்கள் பீதி
/
சங்கராபுரத்தில் தொடர் திருட்டு: பொதுமக்கள் பீதி
ADDED : பிப் 20, 2025 06:48 AM
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் இரவு நேர ரோந்து பணியை போலீசார் அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சங்கராபுரத்தில், கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். கடந்த மாதம் சோழம்பட்டு மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றனர். அன்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டில் இருந்த, 10 சவரன் நகை, பணத்தை திருடி சென்றனர். நேற்று முன்தினம் எஸ்.குளத்துார் மெயின் ரோடில், 6 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.5 லட்சம் மதிப்பில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருடு போனது. இதனால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், தொடர் திருட்டை தடுக்க இரவு ரோந்து பணியை அதிகரிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

