/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இ-பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
/
இ-பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
ADDED : ஏப் 21, 2025 10:57 PM
கள்ளக்குறிச்சி, ; பிரிதிவிமங்கலத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் வீடுகளை வருவாய்த்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்துவதாக புகார் தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
பிரிதிவிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 137 பேருக்கு, கடந்த 2001ம் ஆண்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இடம் அளந்து பிரித்து தரப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு வருவாய்த் துறை மூலம் இடம் அளந்து தரப்பட்டது. இதில் ஒரு சில பயனாளிகள் வீடு கட்டி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் வருவாய்த்துறை அலுவலர்கள், வீடு கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி, அளந்து விடப்பட்ட வீட்டு மனையை ரத்து செய்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை கண்டித்து கடந்த 19ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களுக்கென வழங்கப்பட்ட வீட்டுமனையை ரத்து செய்வது வன்கொடுமை செயலாகும்.எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைக்கு இ-பட்டா வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கு எவ்வித தடையும் செய்யக்கூடாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.