/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொட்டியம் கிராமத்தில் மலைப்பாம்பு மீட்பு
/
தொட்டியம் கிராமத்தில் மலைப்பாம்பு மீட்பு
ADDED : ஜன 05, 2025 06:49 AM

சின்னசேலம், : தொட்டியம் கிராமத்தில் கரும்பு வயலில் இருந்த 6அடி நீலமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் நேற்று கரும்பு அறுவடை பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது கரும்பு வயலில் 6 அடி நீலம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.
இதனைப் பார்த்த கரும்பு வெட்டும் பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து சின்ன சேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைபாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட மலைப்பாம்பை தகரை காப்பு காட்டில் விடுவித்தனர்.