ADDED : ஜூன் 21, 2025 03:44 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி காங்., சார்பில் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். வட்டார துணைத் தலைவர் வீரவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் வாசிம் ராஜா கேக் வெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
வட்டார தலைவர்கள் பழனி, பாவாடை, மாவட்ட செயலாளர் தனசேகரன், தட்சணாமூர்த்தி, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். விவசாய அணி தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.
உளுந்துார்பேட்டை
உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, காங்., மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பெரியசாமி, நகர தலைவர் விஜயகுமார், திருநாவலுார் வட்டார தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் மாநிலச் செயலாளர் சுரேஷ்குமார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெறும் பெண்களுக்கு பிரட், பிஸ்கட் வழங்கினார். சேவா தளம் மாவட்ட தலைவர் முருகன் வரவேற்றார். நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மேற்கு வட்டார தலைவர் கலைமணி நன்றி கூறினார்.
சங்கராபுரம்
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, காங்., மாவட்ட துணைத் தலைவர் இதாயத்துல்லா தலைமை தாங்கி நலத்திட்ட உதவி வழங்கினார். வட்டார தலைவர்கள் செல்வராஜ், பிரபு, முன்னாள் வட்டார தலைவர் அருள், மாவட்ட பிரிவு தலைவர்கள் கிருஷ்ணன், வழக்கறிஞர் முகமது பாஷா முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
இதில் இளைஞர் காங்., மாவட்ட தலைவர் தங்கதமிழன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் காங்., மாநில பொது செயலாளர் ஆதில்கான் நன்றி கூறினார்.