/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்ட கன்று பேரணி
/
ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்ட கன்று பேரணி
ADDED : செப் 06, 2025 07:28 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் பால் உற்பத்தியாளரகள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்தின்கீழ் கன்று பேரணியினை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் ஒன்றியம் சார்பில் ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் ஜெர்சி கலப்பின வகை கன்று பேரணி, மேலுார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் நடந்தது. பேரணியில் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கன்றுகளை 4 பிரிவுகளாக வகைப்படுத்தி, சிறப்பாக பராமரிக்கப்பட்ட ஜெர்சி கலப்பின கன்றுகளை, கால்நடை பராமரிப்புத் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு மூலம் ஆய்வு செய்து, ஒவ்வொரு பிரிவிலும் மூன்று கன்றுகள் தேர்வு செய்யப்பட்டது. பேரணிக்கு 165 ஜெர்சி கலப்பின கன்றுகள் பங்கேற்றது. அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
கால்நடை மருத்துவர்கள் குழு மூலம் அனைத்து கன்றுகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து ஆவின் ஒன்றியம் சார்பாக வழங்கப்பட்டது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் ஜோஸ்பின்தாஸ், ஆவின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.