/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்குகள் மோதல் ரேஷன்கடை ஊழியர் பலி
/
பைக்குகள் மோதல் ரேஷன்கடை ஊழியர் பலி
ADDED : ஆக 08, 2025 02:31 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ரேஷன் கடை விற்பனையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கராபுரம் அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு மகன் குப்புசாமி, 52; ரேஷன்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார்.
குப்புசாமி நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியளவில் சிவபுரத்தில் இருந்து டி.வி.எஸ்., பைக்கில் கள்ளக்குறிச்சிக்கு சென்றார்.
முதல்பாலமேடு அருகே சென்ற போது, சங்கராபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த பழனி மகன் கர்ணன், 22; என்பவர் வேகமாக ஓட்டி வந்த கே.டி.எம்., பைக் எதிர்திசையில் வந்த குப்புசாமி ஓட்டி வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த குப்புசாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் பின், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி நேற்று உயிரிழந்தார்.
புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.