/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி
ADDED : ஏப் 23, 2025 05:48 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ரமேஷ்குப்தா, வட்ட தலைவர் முருகவேல், செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் சுரேஷ்குமார், திருநாவலுார் ஒன்றிய தலைவர் செல்வராஜ், வட்ட துணை பொருளாளர் ராமச்சந்திரன், மகளிரணி வட்ட தலைவர் குமாரி, செயலாளர் கலைமணி, பொருளாளர் மஞ்சு, வட்ட துணைச் செயலாளர் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதியான பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறையாக அறிவிக்க வேண்டும். அத்தியாச பொருட்கள் அனைத்தும் சரியானயான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருக்கோவிலுார்
திருக்கோவிலுார் தாலுகா அலுவலகம் முன நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தன்ராஜ் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னசேலம்
சின்னசேலம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் இளங்கோவன், சின்னப்பையன், முத்துலிங்கம், கனகராஜ், ஆனந்தி, பூங்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.