/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணையாற்றின் படித்துறையில் புதர்கள் அகற்றம்
/
பெண்ணையாற்றின் படித்துறையில் புதர்கள் அகற்றம்
ADDED : அக் 07, 2024 06:37 AM

ரிஷிவந்தியம்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் தென்பெண்ணை ஆற்றின் படித்துறைகளில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டன.
வாணாபுரம் அடுத்த திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாத பெருமாளை தரிசிக்கின்றனர்.
இக்கோவிலில் இருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு படித்துறை உள்ளது. இந்த படித்துறையில் குப்பைகள் நிறைந்து, புதர்கள் மண்டியும் இருந்தது. இதனால் பக்தர்கள் படிகளின் மூலம் ஆற்றில் இறங்க முடியாத நிலை இருந்தது.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக படிக்கட்டுகளில் இருந்த குப்பைகள், புதர்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
மேலும் உடைந்த படிக்கட்டுகளை சரிசெய்திடவும், கடைக்காரர்கள் அப்பகுதியில் குப்பைகளை வீசிச் செல்லாமல் இருக்கவும் அறநிலையத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

