ADDED : ஆக 25, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி,; சங்கராபுரம் பகுதி கிராமங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டது.
சங்கராபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 52 கிராமங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி முடிந்து பல நாட்களாகியும் அகற்றப்படாமல் இருந்து வந்தது. அதேபோல் அனுமதியின்றியும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் எஸ்.பி., மாதவன் உத்தரவின் பேரில் அனைத்து கிராமங்களிலும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டது.
மேலும், அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்திருந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.