/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு; அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

ADDED : செப் 16, 2025 11:42 PM

கள்ளக்குறிச்சி; ஓட்டுச்சாவடி மையங்களை பிரித்தல், மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களை பிரித்தல், இடம் மாற்றம் செய்தல், ஓட்டுச்சாவடி பெயர் மாற்றம் மற்றும் இரு ஓட்டுச்சாவடி நிலையங்களில் மறு சீரமைப்பு செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
தேர்தல் ஆணையத்தால் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வழிமுறைகளின்படி அரசியல் கட்சிகளிடம் கருத்துரை கேட்கப்பட்டது. பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமன படிவங்களை ஒரு வாரத்திற்குள் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, சட்டசபை தொகுதி ஓட்டுபதிவு அலுவலர்கள், தேர்தல் தாசில்தார்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.