/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடியரசு தின விழா: கலெக்டர் தலைமையில் ஆலோசனை
/
குடியரசு தின விழா: கலெக்டர் தலைமையில் ஆலோசனை
ADDED : ஜன 17, 2025 06:57 AM

கள்ளக்குறிச்சி: குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.
அதில், காவல்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அணிவகுப்பு, கொடிக்கம்பம் தயார் செய்யும் பணி, பாதுகாப்பு பணி, முக்கிய அரசு கட்டடங்களில் மூவர்ண விளக்குகளால் அலங்கரித்தல், விழா மேடை தயார் செய்தல், தீத்தடுப்புமுன்னேற்பாடுகள், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் உட்பட பல்வேறு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை உரிய முறையில் மேற்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.