/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் மண் பானை, அடுப்பு வழங்க கோரிக்கை

ADDED : நவ 10, 2025 11:06 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் மண் பானை மற்றும் அடுப்பு வழங்க வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளித்தனர்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, கரும்பு, சர்க்கரை ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது.
இத்துடன், புதிய மண் பானை மற்றும் அடுப்பு வழங்க வேண்டும், மழைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண உதவித் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களின் வீடு மற்றும் தொழில் புரியும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும். மண்பாண்டங்களில் உணவு சமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பாடப்புத்தகத்தில் ஒரு பாடப்பிரிவை உருவாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.