/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காஸ் சிலிண்டர் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
காஸ் சிலிண்டர் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காஸ் சிலிண்டர் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காஸ் சிலிண்டர் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2025 12:29 AM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். அவரது நேர்முக உதவியாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தார்.
குடிமைப்பொருள் தாசில்தார்கள் கள்ளக்குறிச்சி சரவணன், சின்னசேலம் நளினி, சங்கராபுரம் மணிமாறன், உளுந்துார்பேட்டை சிங்காரவேல், வாணாபுரம் கங்காலட்சுமி, திருக்கோவிலுார் புவனேஸ்வரி, நுகர்வோர் அமைப்பினர் அருண் கென்னடி, சுப்ரமணியன், ராஜேந்திரன், மோகன், மணி எழிலன், ஆறுமுகம், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட காஸ் சிலிண்டர் முகவர்கள், பெட்ரோல் பங்க் முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சமையல் காஸ் சிலிண்டர்களை 'டெலிவரி' செய்யும்போது நுகர்வோர் முன்னிலையில் எடையை உறுதிப்படுத்த வேண்டும்; வீட்டு உபயோக சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்; மாவட்டம் முழுதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் அளவு, தரம் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்; மேலும், புகார் புத்தகங்களை அனைவருக்கும் தெரியும் படி வைக்கவேண்டும்; அடுத்தடுத்த கூட்டங்களில் ஒரே புகாரை தொடர்ந்து வலியுறுத்தும் நிலை உள்ளதால், குறைகளை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பெட்ரோல் பங்குகளில் அளவு சான்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நுகர்வோர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, அனைத்து பிரச்னைகளுக்கும் அதிகாரிகள் மூலம் உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் உறுதியளித்தார்.