/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் தயார்
/
தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் தயார்
ADDED : அக் 25, 2025 07:05 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதால் பல்வேறு துறைகள் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நீர் நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது. சாலையோர மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவது உட்பட பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை உடனடியாக சரிசெய்யும் பொருட்டு கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் இருசம்மாள் உத்தரவின் பேரில், லைப் ஜாக்கெட், மின் மோட்டாருடன் கூடிய படகு, நீர் இறைக்கும் பம்ப், லாரி டியூப், கயிறு, ஹெல்மெட் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் குறித்த பிரச்னையை தீயணைப்பு நிலைய எண் 73050 96222 மற்றும் 112 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

