/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க 16க்குள் முன்பதிவு அவசியம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க 16க்குள் முன்பதிவு அவசியம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க 16க்குள் முன்பதிவு அவசியம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க 16க்குள் முன்பதிவு அவசியம்
ADDED : ஆக 07, 2025 02:42 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வரும் 16ம் தேதிக்குள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி. இப்போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது.
மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
குழுபோட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.75 ஆயிரம், 2ம் பரிசு தலா ரூ.50 ஆயிரம், 3ம் பரிசு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
இம்முறை முதல் முறையாக 4ம் இடம் பெறுபவர்களுக்கும், 3ம் மூன்றாம் பரிசுக்கு இணையான பரிசு வழங்கப்பட உள்ளது. இதில் வழங்கப்படும் சான்றிதழ் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகை பெறலாம்.
தமிழ்நாடு முழுவதிலிருந்து 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களும், 17 முதல் 25 வயது கல்லுாரி மாணவர்களும், 15 முதல் 35 வரை பொதுப்பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
போட்டிகளில் பங்கேற்க வரும் 16ம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் 7401703474 என்ற மொபைல் எண்ணில், அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். 'ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை 9514000777 மொபைல் எண்ணில் வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.