/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜே.எஸ்., குளோபல் பள்ளி மாணவர் வில்வித்தை போட்டியில் பதக்கம்
/
ஜே.எஸ்., குளோபல் பள்ளி மாணவர் வில்வித்தை போட்டியில் பதக்கம்
ஜே.எஸ்., குளோபல் பள்ளி மாணவர் வில்வித்தை போட்டியில் பதக்கம்
ஜே.எஸ்., குளோபல் பள்ளி மாணவர் வில்வித்தை போட்டியில் பதக்கம்
ADDED : ஆக 07, 2025 02:42 AM

கள்ளக்குறிச்சி: வில்வித்தை போட்டியில் கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் பள்ளி மாணவர் 7ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆண்டுதோறும் நடக்கும் வில்வித்தை போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான 17வது வல்வில் ஓரி தமிழ்நாடு வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2 மற்றும் 3ம் தேதி நடந்தது. இதில், 10, 14, 17 வயது மற்றும் ஓப்பன் பிரிவில், இந்தியன் வில், ரீகர்வ் வில், காம்பவுண்ட் வில் ஆகிய மூன்று பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. தமிழத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வில்வித்தை வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 1ம் வகுப்பு மாணவர் கிருஷ்,10 வயதுக்குட்பட்டோர் போட்டியில், ரீகர்வ் வில் பிரிவில் 7ம் இடத்தை பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவர் கிருஷ்ஷினை கலெக்டர் பிரசாந்த், ஜே.எஸ்., பள்ளி நிறுவனர் செந்தில்குமார், தாளாளர் ஜனனி செந்தில்குமார், முதல்வர் ஜெயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.