/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: அலுவலகங்கள் 'வெறிச்'
/
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: அலுவலகங்கள் 'வெறிச்'
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: அலுவலகங்கள் 'வெறிச்'
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: அலுவலகங்கள் 'வெறிச்'
ADDED : நவ 27, 2024 08:07 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்த பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வடிவேலு, மாவட்ட மகளிரணி செயலாளர் கல்யாணி, மாவட்ட இணை செயலாளர் ஜெய்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனே வெளியிடுதல், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் 120 பேர் பங்கேற்றதால் தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடியது. மேலும், சான்றிதழ் வழங்குதல் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் பாதிப்புக்குள்ளானது.