/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 12, 2025 11:04 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் தவமணி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை தலைவர் தமிழ்செல்வன், நகர துணை தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம், மாவட்ட தலைவர் ரவி கண்டன உரையாற்றினர்.
நேற்று மாலை 1:00 மணி நேரம் வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக் கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசு துறைகளில் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீத மாக உயர்த்த வேண்டும், சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு சிறப்பு திட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து தாலுகாக்களிலும், புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.