/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
/
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 27, 2025 05:02 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில தலைமை குழு உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை வேறு திட்டங்களுக்கு மாற்றுவதை நிறுத் துதல், தலித், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டா கேட்டு அளித்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது பரிசீலினை செய்து உடனடியாக பட்டா வழங்குதல், பூம் பூம் மாட்டுக்காரர் சமூக மக்களுக்கு சாதி சான்று, பட்டா வழங்குதல் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

