/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் வளர்ச்சிக்குழுவினர் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
ரிஷிவந்தியம் வளர்ச்சிக்குழுவினர் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ரிஷிவந்தியம் வளர்ச்சிக்குழுவினர் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ரிஷிவந்தியம் வளர்ச்சிக்குழுவினர் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 23, 2024 10:52 PM

ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வளர்ச்சிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் எதிரே வளர்ச்சிக்குழு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா, பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் நீதிமன்றம் அமைத்திட வேண்டும்.
போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.
ரிஷிவந்தியத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் சி.சி.டி.வி., கேமிரா அமைத்தல், சிதலமடைந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரை புதுப்பிக்க வேண்டும் மின்வாரிய அலுவலகத்திற்கு நிரந்த கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும். பெரிய ஏரி மதகுகளை புதுப்பித்து துார் வார வேண்டும். அம்பேத்கர் நகரில் புதிய நுாலகம் மற்றும் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் வளர்ச்சிக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.